27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
மலையகம்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் உயிரிழந்த இளைஞன்!

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 2ஏ இலக்க தேயிலை மலை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுரங்க குழிக்குள் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் நேற்று (12) மாலை இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 2ஏ தேயிலை மலை பகுதியில் சட்டவிரோதமாக மூவர் அடங்கிய குழு ஒன்று மாணிக்ககல் சுரங்க குழியில் மண்ணை அகழ்ந்து கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருவர் உயிர் தப்பியதோடு ஒருவர் மண்ணில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவ டின்சின் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய கனகரத்தினம் உபேந்திரன் என்ற இளைஞனே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு ஹட்டன் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பித்துள்ளதோடு ஹட்டன் நீதிமன்ற நீதவான் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 2ஏ தேயிலை மலை பகுதியில் அதிகளவிலான சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிதக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

21 வயது மனைவியின் வாயை வெட்டிய 39 வயது கணவன்!

Pagetamil

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Pagetamil

விபத்தில் இரண்டாகிய தனியார் பேருந்து!

Pagetamil

Leave a Comment