பாடசாலை ஆசிரியர் மீது இ.தொ.க பிரதேசசபை தவிசாளர் தாக்குதல்!

Date:

பூனாகலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சீரற்ற வானிலை காரணமாக, குறித்த பாடசாலை பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், அதனை பார்வையிடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது, பாடசாலை நிர்வாகத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹல்துமுல்ல பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்