‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசர்

Date:

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு தினத்தன்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து

‘ஜிகர்தண்டா 2’ படத்தை இயக்க இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்தப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

படத்தின் நடிகர்கள் குறித்து அறிவிக்கப்படாத நிலையில், டீசரில் மௌதார்கன்னுடன் சர்ப்ரைஸ் கொடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதைக்கடந்து சென்றால் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். இருவருக்குமிடையிலான மோதல் தொடரும்போது ராகவா லாரன்ஸ் கையிலெடுக்கும் ஆயுதத்தின் ஆச்சரியத்துடன் நிறைவடைகிறது டீசர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த டீசரை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்