இயக்கச்சி பொழுதுபோக்கு பண்ணைக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த அதிர்ச்சி: வைத்தியசாலையில் அனுமதி!

Date:

இயக்கச்சி பகுதயில் இயங்கும் தனியார் பண்ணை ஒன்றின் பாதுகாப்பற்ற தொங்கு பாலத்தில் இருந்து வீழ்ந்த இளம் குடும்பப் பெண் கால் முறிந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்கச்சி ஆழியவளை வீதியில் அமைந்துள்ள குறித்த பண்ணைக்கு அதிகலவிலான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

இங்கு பொழுது போக்கு, விளையாட்டு தளங்கள் காணப்படுகின்றது, இதனால் நாளாந்தம் நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.

இங்கு காணப்படும் பாதுகாப்பற்ற தொங்கு பாலத்தில் இருந்து கடந்த காலத்திலும் பலர் வீழ்ந்து படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதனை குறித்த நிருவாகத்தினர் சீர்செய்யாது தொடர்ந்தும் நடாத்தி வருகின்றனர்.

இன்று வவுனியாவில் இருந்து வருகை தந்திருந்த இளங்குடும்பத்தினர் தொங்கு பாலத்தில் பயணித்துள்ளனர். இதன் போது தொங்கு பாலம் ஆட்டம் கண்டு துள்ளி எழுந்துள்ளது. இதனால் இப் பெண் தூக்கி வெளியே வீசப்பட்டுள்ளார், தூக்கி வீசப்பட்ட பெண்னின் காலில் உடைவு ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு போக்குவரத்து வாகன வசதிகள் இல்லை, இதனால் 45 நிமிட தாமதங்களின் பின் 1990 அவச நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்