Pagetamil
இலங்கை

3 யுவதிகளுடன் இரவு விடுதியிலிருந்து திரும்பிய கார் ஒருவரை பலியெடுத்தது!

இன்று காலை கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பம்பலப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் நோக்கிச் சென்ற கார், காலி வீதியில் அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

கஹதுடுவ, பொல்கசோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தின் போது காரில் மூன்று பெண்களும் மற்றுமொரு ஆணும் இருந்ததாகவும், 29 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் காரின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், காரில் பயணித்த ஏனைய இருவரிடமும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இரவு விடுதியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கனடாவில் நடந்த பயங்கரம்: யாழ் இளம்பெண்ணின் சோக முடிவு!

Pagetamil

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு!

Pagetamil

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்ய உத்தரவு!

Pagetamil

“கல்முனையில் சமய தீவிரவாதம்” எனும் குற்றச்சாட்டு தொடர்பில் மக்களுக்கான அறிவித்தல்

Pagetamil

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!