பெல்ஜியம் பொலிசார் வெள்ளிக்கிழமை (9) கிரேக்க சோசலிஸ்ட் முக்கிய தலைவரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் துணைத் தலைவர்களில் ஒருவருமான ஈவா கைலியை பிரஸ்ஸல்ஸில் கைது செய்தனர்.
FIFA உலகக் கிண்ண போட்டியை நடத்தும் கத்தார் சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணை தொடர்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைலி கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் நால்வரும் இத்தாலியிலிருந்து வந்தவர்கள்.
கைது செய்யப்பட்ட நான்கு இத்தாலியர்களில் ஒருவரின் கூட்டாளியான கைலி, காவல்துறையினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தலைநகர் பிரஸ்ஸல்ஸில் 16 முகவரிகளில் பொலிசார் சோதனை நடத்தியபோது 600,000 யூரோக்கள் பணம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, கைது விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெல்ஜிய வழக்குரைஞர்கள் சந்தேக நபர்களின் அடையாளங்களைக் குறிப்பிடவில்லை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிடவில்லை, அது ஒரு “வளைகுடா” நாடு என்று மட்டுமே கூறினார். ஆனால் அது கட்டார் என்பது பின்னர் தெரிய வந்தது.
“விசாரணைக்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், விசாரணை நீதிபதி முன் கொண்டு வரப்படலாம்” என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
“கேள்வி கேட்கப்பட்டவர்களில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்.” என்று மட்டுமே குறிப்பிட்டது.
கைது செய்யப்பட்ட முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர், இத்தாலிய சோசலிஸ்ட் Pier Antonio Panzeri என்று பெல்ஜிய செய்தி நிறுவனமான Le Soir amd Knack கூறியது.
செல்வாக்கு மிக்க நபர்களுக்கு ‘பெரிய பரிசுகள்’
புலனாய்வாளர்கள் “ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளில் ஒரு வளைகுடா நாடு செல்வாக்கு செலுத்துவதாக சந்தேகிக்கின்றனர்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு “பெரிய தொகைகளை செலுத்தி அல்லது பெரிய பரிசுகளை வழங்குவதன் மூலம்” செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டியது.
Panzeri என பெயரிடப்பட்ட இத்தாலிய சோசலிஸ்ட் கட்டார் விவகாரத்தில் ஊழல் செய்ய முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் முயற்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக வழக்குக்கு நெருக்கமான ஒரு ஆதாரத்தினடிப்படையில் பத்திரிகை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
திருமதி கைலி (44) ஒரு முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 14 துணைத் தலைவர்களில் ஒருவர். நவம்பர் மாதம், உலகக் கோப்பை தொடங்குவதற்கு சற்று முன்பு, அவர் கட்டாரின் தொழிலாளர் அமைச்சர் அலி பின் சமிக் அல் மரியை சந்தித்தார்.
கட்டார்ர் செய்தி நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், “உலகக் கோப்பை அரேபியர்களுக்கான அரசியல் மாற்றம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்களில் முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஒரு சிறந்த கருவியாக இருந்தது என்று நான் நம்புகிறேன்…” ஐரோப்பிய பாராளுமன்றம் கட்டாரை “அங்கீகரித்து மதிக்கிறது” அவர் கூறினார்.
நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒரு உரையின் போது அவர் இதே போன்ற கருத்துக்களை கூறினார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சில உறுப்பினர்கள், தொழிலர்கள் “கொடுமைப்படுத்துவதாக” கட்டாரை குற்றம் சாட்டினார்கள்.
67 வயதான Panzeri தற்போது பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட ஃபைட் இம்ப்யூனிட்டி என்ற மனித உரிமை அமைப்பின் தலைவராக உள்ளார். சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் (ITUC) பொதுச்செயலாளர் இத்தாலிய லூகா விசென்டினியும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ITUC ஊடக அறிக்கைகள் பற்றி “தெரியும்” என்று கூறியது, ஆனால் தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
உலகக் கோப்பை போட்டியை நடத்தும் கட்டார், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குறித்த அதன் பதிவுகள் மீதான விமர்சனங்களை எதிர்கொண்டு தனது இமேஜை மேம்படுத்த பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ள நிலையில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திங்களன்று AFP க்கு பேட்டியளித்த விசென்டினி, தொழிலாளர் உரிமைகளில் கட்டார் அடைந்துள்ள முன்னேற்றத்தை வரவேற்றார், ஆனால் கால்பந்து போட்டி முடிந்ததும் “அழுத்தம்” பராமரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கட்டாரின் 2.9 மில்லியன் மக்கள்தொகையில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் அங்கு தொழிலாளர் நிலைமைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன – குறிப்பாக உலகக் கோப்பைக்கு முன்னதாக. தோஹா தனது புலம்பெயர்ந்த தொழிலாளர் அமைப்பில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது, ஆனால் மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்ய அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருமதி கைலி கைது செய்யப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, கிரேக்க சோசலிஸ்டுகளின் (PASOK) தலைவர் Nikos Androulakis அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ட்விட்டரில் அறிவித்தார்.