இலங்கையில் உள்ள மற்றுமொரு இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
உலகில் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ள புதிய தடைப்பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, முன்னாள் இராணுவ அதிகாரி பிரபாத் புலத்வத்த மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
2008 இல் ஊடகவியலாளர் கீத் நொயர் சம்பந்தப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1