சீரற்ற காலநிலை: மட்டக்களப்பில் மூதாட்டி பலி

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெரிய கல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவையாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை பெரிய கல்லாறில் இருந்து 40ஆம் கிராமத்திற்கு பஸ்ஸில் வந்திறங்கி மயான வீதியால் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலையே அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தினை கண்டு பிரதேச கிராம சேவையாளருக்கு அறிவித்துள்ள நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடுமையான குளிர் மற்றும் மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் அதன் காரணமாக குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்