கட்டார் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது குரோஷியா. இன்று நடந்த பரப்பான ஆட்டத்தில் 4-2 என பிரேசிலை தோற்கடித்தது.
எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், ஆட்டநேரத்தில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இதையடுத்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் பிரேசில் சார்பில் நெய்மர் முதல் கோலடித்தார். இந்த கோலின் மூலம் பிரேசிலில் அதிக கோலடித்தவர் என்ற பீலேயின் சாதனையை சமன் செய்தார்.
ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் இருந்த போது, 116 நிமிடத்தில் குரோஷியா தரப்பில் புருனோ பெட்கோவிச் கோலடித்தார்.
120 நிமிடத்தில் 1-1 என சமனிலையெட்டியது. பனால்ட்டியில் சூட்டில் 4-2 என குரோஷியா வெற்றியீட்டியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1