பாரிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு பூசா சிறைச்சாலையின் இரண்டு கைதிகளின் அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் விசேட அதிரடிப்படையினரடில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கஞ்சிபாiன இம்ரான் என்ற குற்றவாளி அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு கையடக்கத் தொலைபேசியும், ஷானுகா மதுஷான் என்ற குற்றவாளி அடைக்கப்பட்டிருந்த அறையில் மற்றுமொரு கையடக்கத் தொலைபேசியும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சம்பவம் குறித்து சிறை கண்காணிப்பாளர் விசாரணையை தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவின் நுழைவாயிலுக்கு அருகில் 5 கைத்தொலைபேசிகள், 5 சார்ஜர்கள் மற்றும் ஐந்து சிம்கார்டுகள் நிலத்திற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1