Pagetamil
விளையாட்டு

அறிமுக டெஸ்டிலேயே 7 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்: அன்றே கணித்த சங்கா, மஹேல!

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் பாகிஸ்தான் அணியின் மஜிக் ஸ்பின்னர் அப்ரார் அகமது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் வீரராக அவர் களம் கண்டார். முதல் இன்னிங்ஸில் 22 ஓவர்கள் வீசி 114 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு ஓவர் மெய்டன்.

ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி இன்று முல்தான் நகரில் தொடங்கியது. நாணயச்சுழுற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் அந்த அணி 281 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அதில் 7 விக்கெட்டுகளை அறிமுகம் வீரர் அப்ரார் கைப்பற்றினார்.

கடந்த 1950ஆம் ஆண்டுக்கு பிறகு ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் தொடக்க செஷனில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த சார்லி டர்னர் (1887), இங்கிலாந்து வீரர் மார்டின் (1890), மேற்கிந்திய தீவுகள் வீரர் வேலன்டைன் (1950) முதல் செஷனில் 5 விக்கெட்டுகளை தங்கள் அறிமுகம் போட்டியில் வீழ்த்தி உள்ளனர்.

யார் இந்த அப்ரார் அகமது?

24 வயதானஅப்ரார் அகமது  லெக் ஸ்பின்னர் என அறியப்பட்டாலும் கூக்ளி மற்றும் கரம் பந்துகள் வீசும் திறன் கொண்டவர். இலங்கையின் மகேஷ் தீக்‌சன போல் லெக் ஸ்பின், ஓஃப் ஸ்பின், கரம் பந்துகள் என வெரைட்டியாக வீசும் மற்றொரு மிஸ்ட்ரி ஸ்பின்னர். பந்தை இவர் கடுமையாக ஸ்பின் செய்வது கராச்சி கிரிக்கெட் ஆர்வலர்களை கவர இவர் கவனம் பெற்றுள்ளார். பாகிஸ்தானில் இருக்கும் கிரிக்கெட் மண்டலங்களில் மிகவும் பலவீனமானது கராச்சி மண்டலம்தான்.

ஆனால், அங்கிருந்து வந்த இவர் 2016ஆம் ஆண்டில் 53 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார். ரஷீத் லத்தீப் அகாடமியில் இவரது பந்துவீச்சு பரிணாமம் அடைந்தது. கராச்சி கிங்ஸ் அணிக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி20 கிரிக்கெட்டில் இவரது பெயர் வெளி உலகிற்கு தெரியவந்தது. இயான் மோர்கனுக்கு இவர் 7 டொட் போல்களை வீசியது பேசு பொருளானது. இந்தப் போட்டியில் இயான் மோர்கன் 57 பந்துகளில் 80 ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்ரார் அகமதுவை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இவரது பந்துவீச்சை பார்த்து இலங்கை ஜாம்பவான்கள் ஜெயவர்தன மற்றும் சங்கக்கார அசந்துவிட்டனர். அவர்கள் விதந்தோதியதும், அப்ரார் அகமது மீது கூடுதல் கவனம் விழுந்தது.

இவரது பயிற்சியாளர் மஸ்ரூர் இவரைப் பற்றி கூறும்போது, “அனைத்து பார்மெட்டிலும் விளையாடும் திறன் கொண்ட வீரர். ஏனெனில் இவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் கலையை அறிந்தவர். பல விதமான பந்துகளை வீசி திணறடிப்பவர். இவர் பாகிஸ்தானின் முக்கிய பந்து வீச்சாளராவது உறுதி” என சொல்லியுள்ளார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கப்டன் பாபர் அசாம், 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஷகீல், 32 ரன்கள் எடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment