தீபவொளி கார்த்திகை விரத உற்சவத்தினமான இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வீடுகளில் சிட்டி விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
இன்று இரவு 06.30 மணியளவில் இருந்து யாழ். மாவட்டத்தில் உள்ள இந்துக்களின் இல்லங்களில் திருக் கார்த்திகை திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது.
சர்வாலய தீபத்திருநாளை முன்னிட்டு யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட சில இடங்களில் கண்ணுக்கு அழகூட்டும் வகையில் ஒளிமயமான விளக்குகள் ஏற்றப்பட்டு காணப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1