25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

ஒரு பாடசாலையில் 60 மாணவர்கள் மயங்கி விழுந்தனர்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை பதுளை முத்தியங்கனை ரஜமகா விகாரையின் அறநெறி பாடசாலையின் கூட்டத்தின் போது 60 சிறுவர்கள் மயங்கி விழுந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின் கட்டணம் தொடர்பான உரையாடல் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திரு. கிரிந்திகொட மேலும் குறிப்பிட்டார்:

“1800 குழந்தைகள் படிக்கும் நகர்ப்புற அறநெறி பாடசாலை இது.. கிராமங்களுக்குப் போனால் எப்படியான நிலை இருக்கும்? மின்சாரப் பிரச்னை எல்லோருக்கும் பிரச்னை. மீண்டும் மின் கட்டணம் உயருமா என்று தெரியவில்லை. இருந்தாலும் நான் மக்கள் தரப்பில் இருந்து அனுதாபத்துடன் சிந்தித்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  உணவை எடுத்துச் சென்று கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment