ஈரானின் கலாச்சார காவலர் பொலிஸ் பிரிவு மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை, ஈரான் அரசு நடத்தும் அல்-ஆலம் செய்திச்சேவை மறுத்துள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியக் குடியரசு அதன் கலாச்சார காவலர் பொலிஸ் பிரிவை கலைத்துவிட்டதாக பல செய்திகள் தெரிவித்தன.
சனிக்கிழமையன்று ஒரு மத மாநாட்டில் ஈரானின் சட்டமா அதிபர் முகமது ஜாபர் மொண்டசெரி கூறிய கருத்துக்களை மேற்கோள்காட்டி அந்த செய்திகள் வெளியாகின.
அரை-அதிகாரப்பூர்வ ISNA செய்தி நிறுவனத்தின்படி, மொன்டசெரியிடம் ஒரு பங்கேற்பாளர் “ஏன் கலாச்சார காவல் காவல்துறை மூடப்பட்டது” என்று கேட்கப்பட்டது. அதற்கு மொண்டசெரி பதிலளித்தார்: “கலாச்சார காவல் பொலிஸுக்கும் நீதித்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை, அதை நிறுவிய மக்களளே அது மூடப்பட்டது.” என்றார்.
“நிச்சயமாக இருந்தாலும், சமூகம் முழுவதும் உள்ள சமூக நடத்தைகளை நீதித்துறை தொடர்ந்து கண்காணிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
எனினும், அல்-ஆலம் செய்திச்சேவை”ஈரான் இஸ்லாமிய குடியரசில் உள்ள எந்த அதிகாரியும் கலாச்சார காவலர் பொலிஸ் பிரிவின் மூடலை உறுதிப்படுத்தவில்லை.” என தெரிவித்தது.
மொன்டசெரியின் கருத்துக்களின் அடிப்படையில், கலாச்சார காவலர் பொலிஸ் பிரிவுக்கும் நீதித்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அல்-ஆலம் கூறிaது.
“சில வெளிநாட்டு ஊடகங்கள் சட்டமா அதிபரின் அறிக்கையை இஸ்லாமியக் குடியரசு அதன் ஹிஜாப் (சட்டங்கள்) லிருந்து விலகியதாகவும், சமீபத்திய கலவரங்களால் தாக்கம் செலுத்தியதாகவும் வகைப்படுத்த முயன்றன” என்று அது மேலும் கூறியது.
22 வயதான ஈரானிய குர்திஷ் பெண் மஹ்சா அமினி கலாச்சார காவலர் பொலிஸ் பிரிவினால் கைதாகி கடுமையாக தாக்கப்பட்ட பின் மூன்று நாட்களில்- செப்டம்பர் 16 உயிரிழந்தார். அன்று முதல் ஈரான் முழுவதும் எதிர்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. ஈரான் அரசு இதனை “கலவரங்கள்” என்று குறிப்பிடுகிறது.
1979 இல் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து மிகத் துணிச்சலான சவால்களில் ஒன்றாக மாறியுள்ள தற்போதைய போராட்டங்களில் ஆட்சியை வீழ்த்துவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஈரானின் 1979 புரட்சிக்குப் பின்னர் விரைவில் பெண்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட ஹிஜாப் அணிவது, ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளின் தாராளவாத சிந்தனையின் அடிப்படையில் மென்மையாக அணுகப்பட்டது. எனினும், தற்போது ஆட்சியிலுள்ள பழைமைவாத ஜனாதிபதி ரைசியின் நிர்வாகத்தில், ஆடைக் கட்டுப்பாட்டை மீறும் பெண்கள் ஈரானின் கலாச்சார காவலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுகிறார்கள்.
ஆடைக் குறியீட்டின் அடிப்படையில், பெண்கள் பொது இடங்களில் தங்கள் தலைமுடியை முழுமையாக மறைக்க வேண்டும் மற்றும் நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.