நல்லூர் பிரதேச சபையில் கடந்த 4 வருடங்களாக திண்மக்கழிவகற்றலை செயற்படுத்த முடியாமல் மிக மோசமான நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த பாதீட்டுக்கு தவிசாளராக வருபவர் இதற்கான பொறிமுறையினை கட்டாயமாக் கொண்டு வர வேண்டும். இந்த முறை பாதீட்டில் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கான கூலி என்று 10 மில்லியனை ஒதுக்கியுள்ளனர். இதுக்கான எந்த பொறிமுறையும் குறிப்பிடப்படவில்லை , தொகையும் ஒதுக்கப்படவில்லை. இதற்கான மறுமொழி தரப்படவில்லை. இந்த பாதீட்டினை எவ்வாறு ஏற்பது? இது அநீதியான விடயம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான திருமதி.வாசுகி சுதாகர் தெரிவித்தார்.
யாழில் நேற்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச சபைகளில் அதிகமான வருமானத்தைப் பெறுவது நல்லூர் பிரதேசபை .இந்த பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களின் பல பகுதிகளில் பாதீனியம் மிகப்பெருமளவில் இருக்கிறது.இதனை ஒழிப்பதற்கான முறையான ஒழிப்பதற்கு ஒதுக்கீட்டினை ஒதுக்கி இருக்க வேண்டும். இதற்கு நல்லூர் பிரதேசபை 20 ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். இது முசுப்பாத்தியாக ஒதுக்கியிருக்கிறார்கள் இன்றை நிலையில் ஒரு வட்டாரத்தில் இதனை ஒழிப்பதற்கு இந்த தொகை போதுமா என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களை ஏமாளியர்களாக அல்லது உறுப்பினர்களை ஏமாளியர்களாக பார்த்து இந்த பாதீட்டினை தயாரித்து இருக்கிறார்கள்.இந்த பெரிய சபையில்,இவ்வளவு பேர் இருக்கும் இடத்தில் இந்த பாதீட்டினை ஆமோதிக்கிறோம் ,சிறந்த பாதீடு என எழுந்தமானமாக கதைப்பதற்கு நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.
எங்கள் வட,கிழக்குச் சமூகம் போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகளவில் உள்ள சமூகம். மகளிர், சிறுவர் தினத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒரு தொகை இல்லை மகளிருக்கான ஒதுக்கீட்டினை செய்யுங்கள் ,இதனால் சமூகம் முன்னேறும் என்று நாங்கள் கூறும் போது அதுக்கான திருத்தத்தினை மேற்கொள்வதற்கு உடன்படவில்லை ,மகளிர் அபிவிருத்தி அடையாத எந்த சமூகமும் விடுதலை பெற்றதாக இல்லை.
இந்த 12 வட்டாரங்களில் ஏதாவது ஒரு வட்டாரத்தில் பொது மக்களுக்காக சிறு கைத்தொழில் மையத்தை உருவாக்குங்கள் என்று பல தடவை கோரிக்கை விட்டிருந்தேன். அதுக்கான எந்தவொரு ஒதுக்கீடும் ஒதுக்கப்படவில்லை. அவ்வாறு ஒதுக்குவதாக இருந்தால் ஏனைய நலன்களை செய்யேலாது என்று எனக்கு மறுமொழியளிக்கப்பட்டது. இதனை அமைத்து பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கு ஏன் முன்வரவில்லை.
நல்ல ஒரு பாதீட்டினை உருவாக்குவதற்கு நாங்கள் பல முன்மொழிவுகளை கொடுத்தாலும் தவிசாளர் தனது நலனும்,தனது கட்சி நலனும் சார்ந்து ,தனது கருத்துக்களை ஆமோதிப்பவர்களை கொண்டு செல்வதற்கும் தான் சில விடயங்களை எடுத்துக்கொள்கிறார்.
இன்று பேதையானது எங்களை மிக பெரியளவில் சூழ்ந்து காணப்படுகிறது. எவற்றேவற்றுக்கோ பல இலட்ச கணக்கில் ஒதுக்கிறார்கள் ,ஆனால் இந்த போதை ஒழிப்புக்கு மாத்திரம் வெறும் 5 இலட்சம் ஒதுக்கியுள்ளார்கள் .நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் 200 க்கும் மேற்பட்டதாக உள்ளன. இதற்கு எவ்வளவு செலவாகும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் அத்துடன் பாடசாலை மாணவர்களையும் கவனத்தில் எடுக்காமல் ஒதுக்கியிருக்கிறார்.
இந்த பாதீடு என்பது நிராகரிக்கப்பட வேண்டியதொன்று.இந்த தவிசாளரின் செயற்பாடானது கடந்து 2 வருடங்களாக பெண்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையினை செய்துகொண்டிருக்கிறார் என்பதனை அப்பட்டமாக சொல்லிக்கொள்கிறேன்.மிக மோசமான நபர் அந்த தவிசாளர் என்ற கதிரையில் இருக்கிறார் என மிகவும் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். இவரின் நடவடிக்கை மிகவும் கேவலமான முறையில் இருந்தது என்பதனையும் கூறிக்கொள்கிறேன்.
இந்த பாதீடு பற்றி விவாதிக்கும் பொது நான் எழுந்து இதனை ஆமோதிக்க மாட்டேன் என்று கருத்து தெரிவிக்கும் போது யு.என்.பி இல் இருக்கிற புகானந்தன் எழுத்து ஆபாசமாக எதுகைமோனையுடன் கூறியிருந்தார். இதனை தடுத்து நிறுத்துவதுக்கு முடியாத முள்ளந்தண்டு இல்லாது தடுக்க முடியாத தவிசாளர் என அவர் தெரிவித்தார்.