“அவன் என் லவ்வர்…“ என ஒரு இளைஞனிற்காக 5 இளம்பெண்கள் நடுவீதியில் கட்டிப்புரண்டு சட்டையிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பீகாரில் கடந்த திங்கள்கிழமை இந்த அனர்த்தம் நடந்துள்ளது.
சோன்பூரில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் அங்கு நடந்த கண்காட்சி ஒன்றுக்கு சென்று உள்ளார். இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலி பார்த்துவிட்டார். அதுகுறித்து இளைஞரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் இரண்டு காதலிகளும் ஒருவரின் சட்டையை மற்றவர் கிழித்து சண்டையிட்டுள்ளனர்.
இந்த கொடூர காட்சியை காண அங்கு மக்கள் குவிந்தனர். அங்கு வந்த இன்னொரு இளம்பெண்ணும் புதினம் பார்க்க எட்டிப்பார்த்துள்ளார். தனது காதலனுடன் இரண்டு பெண்கள் தகராற்றில் ஈடுபடுவதை பார்த்து, 3வதாக அவரும் சண்டையில் குதித்தார்.
இவ்வாறு இளைஞனின் 5 காதலிகள் அங்கு குவித்து, மாறி மாறி சட்டையை கிழித்து, தலைமுடியை இழுத்து சண்டையிட்டனர்.
ஆனால், யாரையுமே தடுக்க ய முடியவில்லை.. “அவன் என் லவ்வர்… அவன் என்னுடைய பாய்பிரண்ட்” என்று 5 பேரும் மாற்றி மாற்றி சரமாரியாக தாக்கி கொண்டார்கள்.
இவர்கள் சண்டைபோட்டதை அங்கிருந்த பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததுடன், சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சோன்பூர் கண்காட்சியையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த போதும், பொலிசாருக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தது பற்றி நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
வைரலான வீடியோ தொடர்பாக சோன்பூர் தகவல் மக்கள் தொடர்பு அதிகாரி கன்ஹையா குமார் கூறுகையில், இதுபோன்ற சம்பவம் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை. அப்படி ஒரு வீடியோ வைரலாகிறது என்றால் அது தனிப்பட்ட விஷயம். இதில் நிர்வாகம் என்ன செய்ய முடியும் என தெரிவித்தார்.
बिहार : एक बॉयफ्रेंड के लिए भिड़ गईं 5 लड़कियां
◆ एक को सोनपुर मेला घुमाने लाया था, बाकियों ने देखा तो टूट पड़ी
◆ हाथापाई ऐसी हुई कि कपड़े तक फट गए pic.twitter.com/YJSh2ZvgQL
— abhishek kumar (@mrabhishek9386) November 29, 2022