29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

‘பிள்ளை பெற முடியாது என தெரிந்தால் தேனிலவு செல்லக்கூடாது’: ஆனந்தசங்கரி அட்வைஸ்!

பிள்ளையைப் பெற முடியாது எனது தெரிந்துகொண்டும் மீண்டும் மீண்டும் அரசுடன் தேன் நிலவுக்குச் சென்று வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும் ஏமாற்றி எம்மக்களையும் அவமதிக்கும் செயல் தேவைதானா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

மீண்டும் ஒருமுறை தமிழ்க்கட்சிகள் சில அரசுடன் ஒரு நிபந்தனை அற்ற பேச்சுக்குத் தயாராகி வருகின்றன.

பிள்ளையைப் பெற முடியாது எனது தெரிந்துகொண்டும் மீண்டும் மீண்டும் அரசுடன் தேன் நிலவுக்குச் சென்று வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும் ஏமாற்றி எம்மக்களையும் அவமதிக்கும் செயல் தேவைதானா?

தமிழர்களுடைய உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தில் ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட எமது இளைஞர்களும் யுவதிகளும் எம்மினத்தின் எதிர்காலத்துக்காகத் தமது உயிர்களை விதைத்திருக்கிறார்கள்.

அவர்களுடன் இருநூறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் தமது உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் நாம் இழந்திருக்கிறோம். எமது உறவுகள் உலகம் முழுவதும் சிதறுண்டு போய் இருக்கிறார்கள்.

இப்படியான இழப்புக்களுடன் கூடிய ஒரு இனத்தின் சார்பில் இதனுடன் சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரும், இதன் வலிகளைப் புரிந்து கொள்ளாத ஒரு பிரிவினரும் வலி சுமந்த தமிழர்கள் சார்பில் முடிவுகளை எடுத்து அவர்கள் மேல் சுமத்தும் முயற்சிகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அதிகாரமுள்ள இணைப்பாட்சி அடிப்படையிலான அரசொன்று தமிழர்களின் மரபுவழித் தாயகத்தில் அமைப்பதற்கான ஒரு முதற்கட்ட இணக்கப்பாட்டை அரசு வெளிப்படுத்தாதவரை தமிழர் தரப்பு பேச்சு வார்த்தைக்குச் செல்லக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!