தமிழ் தேசத்தின் விடுதலைக்கான தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூர்ந்து, தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் இன்று உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் என்றழைக்கப்பட்ட கம்பர்மலையை சேர்ந்த செல்வச்சந்திரன் சத்தியநாதன், 1982 நவம்பர் 27ஆம் திகதி மரணித்திருந்தார்.
அந்த நாளில் பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள், வருடம் தோறும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
படையினர் உச்சக்கட்ட கெடுபிடி பிரயோகிக்கும் சமயங்களிலும் மாவீரர் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. இம்முறை படைத்தரப்பின் கெடுபிடி வழக்கத்தை விட குறைவாகவிருந்தது.
மாலை 6ஃ05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, சமநேரத்தில் நினைவுச்சுரடர்களும் ஏற்றப்பட்டு துயிலுமில்லங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லம்
மட்டக்களப்பு மாவடி முன்மாரி துயிலுமில்லம்
வடமராட்சி எள்ளங்குளம்
கோப்பாய்
கொடிகாமம்
மன்னார்- ஆட்காட்டி வெளி துயிலுமில்லம்
நல்லூர்
மன்னார் பண்டிவிரிச்சான துயிலுமில்லம்