தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் பிரதான கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு இன்று (24) மாலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறும்.
மாலை கூட்டம் இடம்பெறும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் அங்கம் வகிக்கும் 6 கட்சிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
.இன்றைய கூட்டத்தில் 5 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தமிழ்பக்கம் அறிந்தது.
தவிர்க்க முடியாத காரணங்களினால் தமிழ் தேசிய கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாது.
தமிழ் கட்சிகளை சம்பந்தன் வீட்டுக்கு அழைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் பத்திரிகைகளிற்கு தகவல் வழங்கியிருந்தார். எனினும், அது உண்மையான செய்தியா, போலியான செய்தியா என்பது தெரியாமல், கொழும்பிற்கு பயணிக்கவில்லையென பிற கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மாவை சேனாதிராசாவின் ஒழுங்கமைப்பில் இன்றைய கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், க.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழ் தேசிய கட்சி கலந்துகொள்ளாது!
இதேவேளை, இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய கட்சி கலந்து கொள்ளாது என தமிழ் பக்கம் அறிந்தது.
கலந்துரையாடலை தமிழ் தேசிய கட்சி பகிஸ்கரிக்கவில்லை. அதன் பிரமுகர்களால் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
இன்று வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்றும், நாளை சனிக்கிழமைக்கு கூட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என தமிழ் தேசிய கட்சி கேட்டிருந்தது. அதன் தலைவர் சிறிகாந்தா இன்று வெள்ளிக்கிழமை யாழில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கிறார்.
எனினும், சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால். தமிழ் கட்சிகளின் கூட்டத்தை ஒத்திவைப்பது சாத்தியமற்று போனது.
இதையடுத்து, மாவை சேனாதிராசாவும், என்.சிறிகாந்தாவும் தொலைபேசியில் உரையாடி, இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாவிட்டாலும், அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்து கொள்வதென தீர்மானித்தனர்.