மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு (25) இன்றையதினம் வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னாள் போராளி செழியன் அவர்களது தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது ஏற்பாட்டில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தி குறித்த நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின்போது மாவீரர்களது நினைவுரைகள் இடம்பெற்றன. பின்னர் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1