25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

அரசுடனான பேச்சை ஆரம்பிக்க தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம்: 3 நிபந்தனைகள்!

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, 3 பிரதான விடயங்களை முன்னிறுத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் இன்று (25) கொழும்பில் இரா.சம்பந்தனின் வீட்டில் நடைபெற்ற போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், வினோ நோகராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், க.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய தமிழ் மக்கள் கூட்டணியினரும் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இதன்போது,

காணி அபகரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். அபகரித்த காணிகளை விடுவிக்க வேண்டும்.

இப்போதுள்ள அதிகார பரவலாக்கல் தொடர்பான அரசியலமைப்பு சட்டங்களை முழுமையாக அமுல்படுத்தி, மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை நாம் வரவேற்கிறோம். ஆகிய விவகாரங்களை முன்னிறுத்தி, ஜனாதிபதியுடனான பேச்சு அழைப்பை அணுகுவதென தீர்மானிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் இறுதியான தீர்மானமொன்றை எட்ட ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடலை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment