சங்கானை பிரதேச செயலகத்தின் 15ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டதால் சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜெசிதரன் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் இன்றையதினம் பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்தனர்.
இது தொடர்பாக சங்கானை பிரதேச செயலர் திருமதி பொ. பிரேமினி அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது “உத்தியோகத்தர்களுக்கு தோலில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தண்ணீரினை பரிசோதிப்பதற்காக குறித்த குழுவினர் இன்றையதினம் விஜயம் செய்தனர்” என அவர் தெரிவித்தார்.
இதன்போது அங்கு பெறப்பட்ட தண்ணீர் மாதிரியானது பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது என அவர. மேலும் தெரிவித்தார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1