ஆப்கான் அணியுடனான ஒருநாள் தொடரில் ஆடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளிற்குமிடையிலான ஒருநாள் தொடர் நாளை (24) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
பானுக ராஜபக்ச ஓய்வு கோரியதால், ஆப்கானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குகிறார்.
இந்த ஒருநாள் தொடர் நவம்பர் 25 முதல் 30 வரை கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறும்.
இலங்கை அணி விபரம்-
தசுன் ஷானக, பதும் நிஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, தினேஷ் சந்திமல், குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, தனஞ்சய லக்ஷன், கசுன் ராஜித, மகேஷ் தீக்ஷன, பிரமோத் மதுஷன், அசித்த பெர்னாண்டோ, அஷேன் பண்டார, லஹிரு குமார, பானுகா ராஜபக்ச
சுற்றுப்பயண அட்டவணை:
1வது ஒருநாள் போட்டி – நவம்பர் 25: பல்லேகல் சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி
2வது ஒருநாள் போட்டி – நவம்பர் 27: பல்லேகல் சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி
3வது ஒருநாள் போட்டி – நவம்பர் 30 பல்லேகல் சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி