பியர் அருந்திக் கொண்டிருந்த 5 பாடசாலை மாணவர்கள் கைது!

Date:

பாணந்துறை கடற்கரையில் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பாடசாலை மாணவர்கள் ஐவர் பாடசாலை சீருடையில் பியர் அருந்திய நிலையில் பிடிபட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்களைக் கொண்ட குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை கடற்கரையில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது  பாடசாலைச் சீருடையில் பியர் அருந்திக் கொண்டிருந்த  குறித்த ஐந்து மாணவர்களும் பியர் கலன்களுடன் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பரீட்சை முடிவடைந்ததையடுத்து, பாணந்துறையிலுள்ள மதுபானக் கடையில் பியர் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரைகள் வழங்கி மாணவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்