களுத்துறையில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் தனியார் வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்த ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் களுத்துறையில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து 1,299 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் 4, 5, 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர் என்பதும், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது.
மாவனல்லை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் களுத்துறையில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் பிள்ளைகளை இலக்கு வைத்து நீண்டகாலமாக இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.