அக்குரஸ்ஸ நகரிலுள்ள நகைக்கடை ஒன்றிற்கு வந்த திருடன் நகைக் கடையின் உரிமையாளர் மீது மிளகாய்ப் பொடியை வீசிவிட்டு, சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் பெட்டியுடன் தப்பிச் சென்றுள்ளார்.
நகைக்கடையிலிருந்தவர்கள் விரட்டிச் சென்ற போதும், திருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.
நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பு கொள்ளையன் நகரின் மற்ற நகைக் கடைகளில் சுற்றித் திரிந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1