மூன்று வருடங்களுக்கு மேலாக ஒரே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நிலைய பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும், சுமார் 1300 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 1090 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மிக விரைவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலையத் பொறுப்பதிகாரிகள்அரசியல் செல்வாக்கு அல்லது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நியமிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவித்த அமைச்சர், அவர்களின் தகுதிக்கேற்ப சரியான பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.