ஓமன் மற்றும் டுபாய் நாடுகளுக்கு மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முகவர் ஒருவரும் நேற்று (19) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமன் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் ரிஸ்வான் (44), அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முகவர் பாலகிருஷ்ணன் குகனேஸ்வரனும் அவிசாவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை அழைத்துச் சென்று வேறு வேலைகளுக்கு வற்புறுத்தியதாகவும் இந்த நபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சந்தேக நபருக்கு எதிராக ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேகநபரிடம் விசாரணை நடத்தப்பட்டு நேற்று (20ஆம் திகதி) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.