26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இலங்கை

அமெரிக்கா தடைசெய்த இலங்கையர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு உதவினாரா?

அல்கொய்தாவுடன் வர்த்தகம் செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளால் அண்மையில் தடை செய்யப்பட்ட இலங்கையரான மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் மூன்று வருடங்களுக்கு முன்னர் சஹாரான் ஹாசிம் குழுவினர் நடத்திய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டாரா என்பது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, “அவர் தாக்குதல் தொடர்பான ஒரு பெரிய வலையமைப்பில் இருக்கலாம்” என்று விசாரணைகளுடன் தொடர்புடைய ஒரு ஆதாரம் தெரிவித்ததாக, சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பேருவளை, சைனா ஃபோர்ட் ரோட்டில் வசிக்கும் நிசார், அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்தால் (OFAC) கடந்த வாரம் தடைசெய்யப்பட்டிருந்தார். அல்-கொய்தாவின் நோக்கங்களை மேம்படுத்துவதற்காக தனிநபர்கள் மற்றும் நிதிகளின் சர்வதேச இயக்கத்தை எளிதாக்குவதற்கு அமெரிக்க திறைசேரியினால் முன்னர் தடைசெய்யப்பட்ட வணிக பங்குதாரர் மற்றும் உறவினரான அஹ்மத் லுக்மான் தாலிப்க்கு அல்லது ஆதரவாக.பொருள் உதவி, நிதியுதவி, அல்லது பொருட்கள் அல்லது சேவைகளுக்கு நிதி, பொருள் அல்லது தொழில்நுட்ப ஆதரவை வழங்கியதற்காக தடைசெய்யப்பட்டார்.

ஏற்கெனவே தடைசெய்யப்பட்ட லுக்மான் தாலிப் நிட்டம்புவ, கலேலிய பிரதேசத்தை வசிப்பவர் என்றும், அவர் வெகுகாலத்தின் முன்னரே அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து தற்போது அவுஸ்திரேலிய பிரஜை என்றும் தெரியவந்த நிலையில் விசாரணைகள் ஆழமாக சென்றுள்ளன.

அவரும் அவரது மூத்த மகனும் (அவரது பெயர் உடனடியாக கிடைக்கவில்லை) கட்டார் அரசாங்கத்தால் 2020 இல் காவலில் வைக்கப்பட்டனர், பின்னர் விடுவிக்கப்பட்டனர், இப்போது கட்டாரில் வசிக்கின்றனர். அதே ஆண்டு அவர்களும் அமெரிக்க திறைசேரியினால் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள லுக்மானின் இளைய மகன் – அஹ்மத் என்றும் பெயரிடப்பட்டுள்ளார் – அவர் ரத்தின வியாபாரத்தில் இருக்கிறார், இப்போது அவுஸ்திரேலிய அரசாங்க காவலில் உள்ளார்.

அகமதுவின் மாமியார் உறவினரே, தற்போது தடைசெய்யப்பட்ட நிசார். அவர் இரத்தின வியாபாரமும் செய்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேருவளையில் உள்ள மகன் அஹமட்டின் வீட்டிற்கு காவற்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

குளவி தாக்குததால் வைத்தியசாலையில் பரபரப்பு – 11 பேர் மீது குளவி கொட்டு

east tamil

இந்திய மீனவர்களுக்காக விளக்கமறியல் மேலும் நீடிப்பு

east tamil

பாதுகாப்பு அமைச்சில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய

east tamil

Leave a Comment