26.3 C
Jaffna
December 14, 2024
Pagetamil
மலையகம்

கோடீஸ்வர வர்த்தகர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

கண்டியில் பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளரான மங்கள குணவர்தன என்ற நபர், தனது தனிப்பட்ட துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திகன நகரில் உள்ள அவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னர் குறித்த வர்த்தகர் ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வர்த்தகர் கண்டி, பல்லேகல்லை, திகன, தெல்தெனிய ஆகிய இடங்களில் பல நிறுவனங்களை வைத்திருந்தார். அவர் வாகன விற்பனை நிலையங்கள், அடகு வைப்பு நிலையங்கள், தளபாடங்கள் வர்த்தகம், பல்வேறு வர்த்தக முகவர் நிலையங்கள் என பல பெரிய வர்த்தக நிறுவனங்களுக்குச் சொந்தமானவர் என்பது பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இறந்த வர்த்தகர் பணத்தை கடனாக கொடுத்து வட்டி சம்பாதிப்பதில் ஈடுபட்டு வந்தார். அவர் தனது வியாபார வேலைக்காக திகன மற்றும் தெல்தெனியவில் பல அலுவலகங்களை பராமரித்து வந்தார்.

டொன் ரஜீவ மங்கள குணவர்தன, 54 வயதான இந்த வர்த்தகர், திகன-மங்கள என்ற பெயராலும் அறியப்பட்டவர்.

அவர் கண்டியில் பல கட்டிடங்களை வைத்திருந்தார். வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அவர்களின் கட்டிடங்களை வர்த்தகர் பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பல்லேகல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

21 வயது மனைவியின் வாயை வெட்டிய 39 வயது கணவன்!

Pagetamil

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Pagetamil

விபத்தில் இரண்டாகிய தனியார் பேருந்து!

Pagetamil

Leave a Comment