மாத்தளை சுஜாதா பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 45 பாடசாலை மாணவிகளுக்கு தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் காலை கூட்டத்தின் போது சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர், சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறான அறிகுறிகளை வெளிப்படுத்திய பெருமளவிலான மாணவிகள் அண்மையில் வென்னப்புவவில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்டனர்.
அந்த மாணவர்களில் சிலருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட 45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வை.எம்.எஸ்.யாப்பா தெரிவித்தார்.
சுகாதாரத்துறையினரின் உதவியுடன் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்