பெண்கள் உரிமைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவம்பரில் அனுசரிக்கப்படும் “பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை” முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை வெளிக்கொணரும் வகையில் இன்று கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மேடை நாடகம் அடிப்படையிலான ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சுதந்திர சதுக்கத்தில் இருந்து கொழும்பு 07 இல் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு அருகாமையில் ஆரம்பமான தமது எதிர்ப்பு பேரணியை பொலிஸார் தடுத்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
அதன் பின்னர், ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட எஞ்சியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு முன்பாக புதிய போராட்டத்தை ஆரம்பித்தனர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரையும் ஒன்றாகக் கைது செய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.
Former MP Hirunika Premachandra was arrested by the Cinnamon Gardens Police. #Lka pic.twitter.com/xcN98rnZgd
— Pagetamil (@Pagetamil) November 14, 2022




