பாபர், ரிஸ்வான் மிரட்டல் ஆட்டம்: நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

Date:

நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான்.

முக்கியமாக பாகிஸ்தான் அணியின் கப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இந்தப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர். இதன் மூலம் ரி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் மூன்றாவது முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளது பாகிஸ்தான்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. போல்ட், சவுதி, ஃபெர்குசன், சான்ட்னர், சோதி போன்ற நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இந்த போட்டியில் கைகொடுக்கவில்லை. தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி நேர்த்தியாக ரன்களை விரட்டியது. முதல் விக்கெட்டிற்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானும் 122 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

பாபர் 42 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஸ்வான், 43 பந்துகளில் 57 ரன்களை எடுத்து அவுட்டானார். முகமது ஹாரிஸ், 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் ஷான் மசூத், 3 ரன்கள் எடுத்தார். இஃப்திகார் ரன் ஏதும் எடுக்கவில்லை. 19.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது பாகிஸ்தான். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 2 விக்கெட்டும், சான்ட்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

முன்னதாக, ரொஸ் வென்ற நியூஸிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை அந்த அணி எடுத்தது. ஃபின் ஆலன், டெவான் கான்வே மற்றும் கிளென் பிலிப்ஸ் போன்ற வீரர்கள் விரைவில் வெளியேறி இருந்தனர்.

கப்டன் வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். மறுபக்கம் மிட்செல், 35 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். கடந்த 2021 ரி20 உலகக் கோப்பை அரையிறுதியிலும் அவர் அரைசதம் விளாசி இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நவாஸ் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான அரையிறுதியில் வெல்லும் அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும்.

 

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்