இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கொல்லப்பட்ட, சிறைவைக்கப்பட்ட மற்றும் அடக்குமுறைக்கு உள்ளானவர்களை நினைவுகூர்ந்து இன்று (9) பிற்பகல் காலி முகத்திடலில் நடத்தப்பட்ட மௌனப் போராட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை நினைவு கூர்ந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்ட போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பெருமளவான பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலி முகத்திடல் பிரதேசத்தை விட்டு வெளியேறி, நினைவேந்தல் பாடல்களை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1