தனது இரண்டு இளம் மகள்களின் கழுத்தில் கயிற்றை கட்டிக்கொண்டு எடுத்த புகைப்படத்தை உறவினர் ஒருவருக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பிய நபரை வீரகுள பொலிஸார் சனிக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் வீரகுள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமமொன்றில் வசிப்பவராவார்.
சந்தேக நபரின் மனைவி எப்போதோ அவரை விட்டுச் சென்றதாகவும், அதன் பின்னர் 10 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை அவர் பராமரித்து வருவதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனது மனைவியை மீண்டும் வர வைப்பதற்காக, சந்தேகநபர் உறவினர்களுக்கு படங்களை அனுப்பியதை அடுத்து, விசாரணைகள் நடத்தப்பட்டு, உறவினரின் முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரின் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதற்காக செய்யப்பட்டதா அல்லது வேறு ஒரு குற்றச் செயலா என்பது இதுவரை வெளிவரவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1