இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எட்டு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1