நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட 5 பேர் காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹரகம பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



