இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை வலித்தூண்டல் பகுதியில் உள்ள பற்றைக்காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 24 பொதிகளில் கட்டிவைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினரிடம் கஞ்சாவை ஒப்படைத்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1