25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
மலையகம்

அடங்க மறுத்தவர் விளக்கமறியலில்

நீதிமன்ற கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதவான் நேற்று (02) இந்த உத்தரவை பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் அமைதியாக இருக்குமாறு அங்கிருந்த மக்களுக்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அப்போது நீதிமன்றத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் திறந்த நீதிமன்றத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

அங்கு, ஒருவரை அழைத்து, அவர் வந்த நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்தால், அமைதியாக இருக்கும்படியும், இல்லையென்றால் குறித்த இடத்தை விட்டு வெளியேறும்படியும் அறிவுறுத்தினர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர், சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை திட்டி தாக்கியதுடன், அந்த அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபரை கைது செய்து நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

Leave a Comment