Pagetamil
இலங்கை

வெளிநாட்டவரை திருமணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் நீங்குகிறது!

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு இன்று (2) பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுபோன்ற இடையூறுகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் இந்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று (2) காலை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

தற்போதைய நடைமுறையின்படி, வெளிநாட்டு பிரஜை ஒருவர் இலங்கையரை திருமணம் முடிப்பதில் பல சிரமங்கள் காணப்படுகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!