Pagetamil
இலங்கை

வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார்.

அவரது அருகில் பிளேட் ஒன்றும் கையடக்க தொலைபோசி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அவரது பணப்பையில் ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் மக்களின் உதவியுடன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் கணேசன் விஜிதரன் வயது 30 என அவரது சாரதி அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!