வென்னப்புவ உல்ஹிட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் 90 இலட்சம் பெறுமதியான கூலர் வாகனத்தை கடத்திச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உல்ஹிட்டியாவ கடற்கரையில் மீன் கொள்வனவு செய்ய வந்த கூலர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது கடத்தப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தான் உல்ஹிட்டியாவ கடற்கரைக்கு மீன் கொள்வனவு செய்ய சென்றதாகவும், மீன்பிடி படகுகள் வர தாமதமானதாகவும், ஆயுதம் ஏந்திய மூவர் வந்து, கூலர் கதவைத் திறந்து, கத்தியால் தாக்கி, வாகனத்தில் இருந்து வெளியே இழுத்துபோட்டுவிட்டு, வாகனத்தை கடத்திச் சென்றதாக சாரதி கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1