தீவிர சமூகப்பிரச்சனையாக உருவெடுக்கும் ‘சட்டபூர்வ வன்புணர்வு’: யாழிலும் அதிகரிக்கிறது!

Date:

யாழ் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் 15 வயதான சிறுமியும், 19 வயது இளைஞனும் திருமணம் செய்யவிருந்த நிலையில், மொரட்டுவ பொலிசாரின் தலையீட்டினால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த 15 வயதான சிறுமியை திருமணம் செய்த 20 வயதான பிரான்ஸ் குடியுரிமை பெற்ற இளைஞன் பற்றிய செய்திகள் இன்று வெளியாகியிருந்தன.

சட்டப்பூர்வ வன்புணர்வு பிரச்சினை தீவிர கவலையை எழுப்புவதாக பொலிஸ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை கவலை தெரிவித்துள்ளன.

தண்டனைச் சட்டத்தின் 363வது பிரிவு, 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன், சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி உடலுறவை பாலியல் வன்புணர்வு என வரையறுக்கிறது.

எனினும், காதல் உறவுகளின் விளைவாக நிகழும் சட்டரீதியான வன்புணர்வு “தீவிரமான சமூகப் பிரச்சினையாக” மாறியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

காதல் உறவுகளாலேயே 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பெரும்பாலும் வன்புணரப்படுகிறார்கள். இதில் அவர்களின் சம்மதம் இருந்தாலும், அது பாலியல் வன்புணர்வாக கருதப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டில் 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் வன்புணரப்பட்டதாக 38 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இதில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 10 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் அச்சுவேலி பொலிஸ் பிரிவில் அதிகமான சம்பவங்கள் பதிவாகின.

16 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வன்புணரப்பட்ட 1 சம்பவம் பதிவாகியது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 28 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இதில் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் அதிகமான சம்பவங்கள் பதிவாகியிருந்தது.

16 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வன்புணரப்பட்ட 4 சம்பவங்கள் பதிவாகின.

2022ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதி வரையில் 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் வன்புணரப்பட்ட 24 சம்பவங்கள் மாவட்டத்தில் பதிவாகியது. இதில் யாழ் பொலிஸ் பிராந்தியத்தில் 15 சம்பவங்களும், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 9 சம்பவங்களும் பதிவாகின.

யாழ் பொலிஸ் பிராந்தியத்தில் 16 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வன்புணரப்பட்ட3 சம்பவங்கயும், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 4 சம்பவங்களும் பதிவாகின.

பொலிசரின் புள்ளி விபரப்படி நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டில் 1720 வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன,  இந்த ஆண்டு இதுவரை 1230 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு, 1720 வன்புணர்வு வழக்குகளில் – சிறுமிகளின் ஒப்புதலுடன் 1382 சம்பவங்களும், ஒப்புதல் இல்லாமல் 338 சம்பவங்களும் உள்ளன.

இந்த ஆண்டு இதுவரை பதிவாகியுள்ள 1230 வன்புணர்வு வழக்குகளில் – சிறுமிகளின் ஒப்புதலுடன் 951 சம்பவங்களும், ஒப்புதல் இல்லாமல் 279 சம்பவங்களும் உள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து சிறார் திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

“பொருளாதார பிரச்சனைகள் உள்ள குடும்பங்களில் 18 வயதிற்குட்பட்ட குடும்ப உறுப்பினர்களை திருமணம் செய்யும் அபாயம் உள்ளது. நெருக்கடிக்கு முந்தைய ஆண்டுகளில் கூட, தாய் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதற்காக வெளியேறிய குடும்பங்களில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள், சட்டரீதியான வன்புணர்விற்கு ஆளாக நேரிடும்ஹ என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்