தென்கொரியா நெரிசலில் உயிரிழந்தவர்களில் இலங்கையரும் ஒருவர்!

Date:

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நேற்றிரவு ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில், 27 வயதுடைய இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

தென்கொரியாவில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் கண்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வேறு யாராவது இலங்கையர் காயமடைந்தார்களா அல்லது இறந்தார்களா என்பது குறித்த விவரங்களை தற்போது சரிபார்க்க முடியாது என தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டங்களிற்காக ஒரு குறுகிய தெருவில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 151 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்