2021 ம் ஆண்டு ஜூன் மாதம் 30 ம் திகதிகோண்டாவில் செல்வபுர பகுதியில் கலையகம் ஒன்றினை தீவைத்துக் கொளுத்தி அங்கிருந்த ஆறு பேரை வெட்டி காயப்படுத்தி, வாகனம் ஒன்றினையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நீண்ட காலமாக பொலிசாரினால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களின் பின்னர் இன்று இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்றரை வருடமாக தலைமறைவாக இருந்த 26 வயதேயான பிரதான சந்தேக நபர் இன்றைய தினம் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1