தனது ரியூசன் வகுப்பில் இணைந்து கொள்ளாத மாணவன் ஒருவனை, பாடசாலையில் வைத்து ஆசிரியர் தாக்கிய சம்பவம் பற்றிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தெல்தெனியவில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த இந்த சம்பவத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்த்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவன், தரம் ஆறிலிருந்து ஒன்பது வரையான காலப்பகுதியில் தன்னை தாக்கியதாக கூறப்படும் ஆசிரியரின் நியூசன் வகுப்பில் கலந்துகொண்டுள்ளார்.
கடந்த கொரோனா காலத்தில் அந்த ஆசிரியர் ஒன்லைன் வகுப்புகளை நடத்தாததால் அந்த மாணவர் மற்றொரு ஆசிரியரின் ஒன்லைன் வகுப்பில் கலந்து கொண்டார்.
கோவிட் காலத்திற்குப் பிறகு, ஆசிரியர் மீண்டும் டியூஷன் வகுப்புகளைத் தொடங்கினார். ஆனால் தாக்கப்பட்ட மாணவர் அந்த வகுப்பிற்குச் செல்லவில்லை. பதிலாக கோவிட் காலத்தில் ஒன்லைன் வகுப்புகளை நடத்திய ஆசிரியரின் வகுப்பில் கலந்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், பாடசாலையில் மாணவனை அழைத்து தனது ரியூசனிற்கு ஏன் வருவதில்லை என அடிக்கடி மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி பாடசாலையை விட்டு வெளியேறவும் நினைத்துள்ளார்.
தாக்குதல் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது கல்வித்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.