25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
சினிமா

கர்ப்பமானதால் திருமணத்தை அறிவித்த பிரபல தமிழ் நடிகை!

நடிகை பூர்ணா தனக்கு திருமணமாகி விட்டதாக அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு , மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகை பூர்ணா. தமிழில் முனியாண்டி விலங்கியல் 3ஆம் ஆண்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

பூர்ணாவுக்கும், டுபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷானித் அலி என்பவருக்கும் கடந்த மே 30ம் திகதி நிச்சயதார்த்தம் நடந்தது.ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களிலேயே இருவரும் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலளித்த பூர்ணா, அந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பூர்ணா தனது திருமணம் குறித்த அதிர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்தினார். நாங்கள் இருவரும் கடந்த ஜூன் 12ஆம் திகதி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார்.

விசா பிரச்சனையால் அனைவரையும் தனது திருமணத்திற்கு அழைக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் விரைவில் கேரளாவில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அழைக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பூர்ணா பற்றிய மற்றொரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களாக தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்த பூர்ணா தற்போது அதை வெளிப்படுத்தியுள்ளதற்கு காரணமுள்ளதாக அந்த செய்தியில் கூறப்படுகிறது. பூர்ணா கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தான் திருமண விஷயத்தை வெளியிட்டதாகவும் செய்திகள் வைரலாகி வருகிறது.

சில காலம் திருமணத்தை ரகசியமாக வைக்க நினைத்த பூர்ணா கர்ப்பமானதாக தெரிகிறது. அவரது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் திருமணமாகாமல் கர்ப்பமாகிவிட்டார் என்ற சர்ச்சை தோன்றும் என்பதால், தனது திருமண விடயத்தை அவசரமாக அறிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

Leave a Comment