காங்கேசன்துறை பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்றிரவு காங்கேசன்துறை பிரதான வீதியில் மாவிட்டபுரம் பகுதியை கடந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ஹைஏஸ் ரக வாகனத்திலேயே திடீரென தீப்பற்றியுள்ளது.
காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த சாரதி வாகனத்தை விட்டு உடனடியாக இறங்கிய நிலையில் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு படையினரால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது.
மின்னொழுக்கே தீ விபத்திற்கு காரணம் என அறிய முடிகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1