27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இந்தியா

மோசடி வழக்கில் சிக்கியதும் இந்தியாவிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற ஜாக்குலின்!

மோசடி வழக்கில் சிக்கிய பின்னர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் தெரிவித்ததுஇ

200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட பணமோசடி தடுப்புச் சட்டம் வழக்கில் ஜாமீன் மனு தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது.

அமலாக்க இயக்குனரகத்திடம் இருந்து எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்று ஜாக்குலினின் வழக்கறிஞர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது மொபைல் ஃபோனில் இருந்து தரவை நீக்குவதன் மூலம் விசாரணையின் போது ஆதாரங்களை சிதைத்ததாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்தது.

அத்துடன், அமலாக்க இயக்குனரகம் சமர்ப்பித்த நீதிமன்ற ஆவணத்தில், “ஜாக்குலின் பெர்னாண்டஸ் புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்கவில்லை. அவர் இந்தியாவை விட்டு வெளியேற விரும்பினார், ஆனால் அவரது பெயர் ‘லுக்அவுட் சுற்றறிக்கை’ அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டிய நபர்களின் பட்டியலில் இருந்ததால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுடன் நேருக்கு நேர் உட்கார வைக்கப்பட்டு, ஆதாரங்களை முன்வைத்தபோது, ​​ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.

ஜாக்குலின் மற்றும் நோரா ஃபதேஹி, சுகேஷிடம் இருந்து சொகுசு கார்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பரிசுகளை பெற்றனர். கிரிமினல் வழக்குகளில் சுகேஷின் தொடர்பு பற்றி நடிகர் ராம் சேதுவுக்குத் தெரிந்து, சுகேஷ் குற்றப்பின்னணி உடையவர் என்றும் அவர் திருமணமானவர் என்றும் எச்சரித்துள்ளார். ஆனால் ஜாக்குலின் அதனை புறக்கணித்து சுகேஷ் உடன் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நவம்பர் 10ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

தற்போது டெல்லி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உட்பட பலரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment