இளம் பெண் ஒருவர், தொலைக்காட்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக பொய்யான வாக்குறுதியை அளித்து, தன்னை ஆபாச வீடியோவில் நடிக்க வற்புறுத்தியதாக பெண் இயக்குனர் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, தனது இரண்டு வயது குழந்தையுடன், பல வாரங்களாக ரயில்வே பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார் என்று பாதிக்கப்பட்ட பெண் சைபர் கிரைம் பொலிசாரிடம் அளித்த புகாரில் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவலின்படி,
எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் முதலில் தொடர்புகொண்டு, ஒரு டிவி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பளித்தார். இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள படப்பிடிப்பு தளத்தை அடைந்தார். முதல் நாள் படப்பிடிப்பிற்குப் பிறகுதான், அது எந்த சீரியலும் இல்லை, வெப் சீரிஸுக்கும் என்று புரிந்தது.
அதற்குள் ஒரு படத்தின் பெயரில் தனக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அந்த பெண் அதிகம் படிக்காதவர், உடன்படிக்கையின் விதிமுறைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
“படப்பிடிப்பு இடத்திற்கு என்னை அழைத்து வந்த எர்ணாகுளத்தை சேர்ந்தவர், ஒப்பந்தம் முழுவதையும் படித்துவிட்டு, அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்று உறுதியளித்தார்” என்று அந்த பெண் கூறினார்.
“நான் ஒரு ஆபாசப் படத்தில் நடிக்க வேண்டும் என்று தெரிந்ததும், நடிக்க மறுத்துவிட்டேன். படத்திலிருந்து விலகுவதென்றால் ரூ.7.5 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கூறி என்னை மிரட்டினார். அவரும் ஒரு பெண் என்றும், அவர்கள் என் முகத்தை காட்ட மாட்டார்கள் என்றும், எனது அந்தரங்கத்தை காட்சிகளில் மறைப்பார்கள் என்றும் கூறி என்னை சமாதானப்படுத்த முயன்றார்.
அந்தப் பெண் என்னை ஏமாற்ற மாட்டாள் என்றும் என் நிர்வாணத்தை யாரும் பார்க்க முடியாது என்றும் உறுதியளித்தாள். அவளை நம்பி நடித்தேன். முதல் இரண்டு நாட்களில் தலா ரூ.20,000 கொடுத்தாள். மூன்றாவது நாளே நான் நடிக்க மறுத்தபோது ரூ.1 லட்சம் கொடுத்தார். 1 கோடி கொடுத்தாலும் இனி படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் தெளிவாக கூறியபோதும் அவர்கள் என்னை தொடர்ந்து மிரட்டினார்கள்.
படம் வெளியானபோது தான் “ஏமாற்றப்பட்டதை” உணர்ந்தேன். நான் போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன் என்று சொன்னேன். சில போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் அவர் நல்லுறவில் இருந்ததால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் கூறினாள்.
நான் திருவனந்தபுரம் சைபர் பிரிவை அணுகினேன். போலீசார் அனைவரையும் அழைத்து விசாரித்தனர். சில நாட்களின் பின், அவர்கள் வழக்கை எடுக்க முடியாது என்று சொன்னார்கள். என் முன்னிலையில் எனது வீடியோவைப் ஒரு அதிகாரி பார்த்து ரசித்தார்.
அடுத்த நாள் அவர்கள் என்னை நேமம் போலீசை அணுகும்படி சொன்னார்கள். இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்ய அங்குள்ள போலீசார் மறுத்ததை அடுத்து தான் சைபர் பிரிவு போனேன். எனது புகாரை அவர்கள் முதலில் பெற்றனர். நடிக்க மாட்டேன் என்று முதலில் சொல்லியிருக்கலாம் என்றார்கள். அப்போது இயக்குனரின் வழக்கறிஞர் ஸ்டேஷனுக்கு வந்தார். அவர்களின் உரையாடலின் மூலம், அவர்கள் நண்பர்கள் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்றார்.
கணவன் உடன் வர தடை விதிக்கப்பட்டது
“படப்பிடிப்பிற்காக நான் செட்டுக்கு வரும்போது என் கணவரை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று முன்பே என்னிடம் கேட்கப்பட்டது. எனவே, நான் தனியாக சென்றேன். ஆனால் அங்கு பல சீரியல் நடிகைகளை அவர்களது தாய், சகோதரிகளுடன் பார்க்க முடிந்தது. இதுபற்றி நான் கேட்டபோது, நான் தான் ஹீரோயின், எனவே யாரையும் அழைத்து வரக்கூடாது என்று பதிலளித்தார்.
முதல் நாள் படப்பிடிப்பில் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன். சந்தேகப்படும்படி எதுவும் இல்லை. அப்போது என்னை பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார்கள்.
“நான் பள்ளிக்குச் செல்லாததால், எனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. நான் செய்யக்கூடியது எனது பெயரை எழுதி கையெழுத்திடுவது மட்டுமே. எனது அடையாள அட்டையிலிருந்து நகலெடுத்து எனது முகவரியைக் கூட எழுதினேன். நான் கீழே கையெழுத்திட்டேன். எனது வழக்கறிஞர், காகிதத்தைப் பார்த்த பிறகு, நான் ஏமாற்றப்பட்டதாக என்னிடம் கூறினார்.
இரண்டாம் நாள் படப்பிடிப்பில் என்னைப் பற்றிய அவர்களின் நடத்தை முற்றிலும் மாறியது. நான் மேற்கொண்டு நடிக்க மறுத்தபோது, ஒரு தயாரிப்பாளர் எனக்கு அறிவுரை கூறினார், ‘எப்படியாவது இவ்வளவு செய்தாய்… இப்போது உன்னால் என்ன செய்ய முடியும், அதிக சம்பளம் கேட்க வேண்டும். 20,000 ரூபாய்க்கு யாரும் இதுபோன்ற வேடங்களில் நடிக்க மாட்டார்கள். உனக்கு ரூ.1 லட்சம் கிடைக்க வேண்டும்.’ அப்போது நான் ஏமாற்றப்பட்டதை அவர்கள் அனைவரும் அறிந்திருப்பதை புரிந்துகொண்டேன். என்னை ஆபாசப் படத்தில் நடிக்க வைத்து வேண்டுமென்றே சிக்க வைக்க முயன்றனர்.
படம் வெளியானதும் என் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. இதனால் கோபமடைந்த எனது கணவரும், அவரது உறவினர்களும் என்னை தற்கொலை செய்து கொள்ளுமாறு கூறி, வீட்டை விட்டு வெளியேற்றினர். எனது பெற்றோர் முன்பே இறந்துவிட்டதால், எனக்கு வேறு யாரும் இல்லை. எனது கணவரால் சொந்த ஊருக்கு கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. வாடகைக்கு வீடு கிடைக்காமல் அலைந்தோம். தம்பனூர் ரயில் நிலையத்தில் ஒரு இரவைக் கழித்தால், மறுநாள் வேறு ஏதாவது ஸ்டேஷனில் தூங்குவோம்.
அடிக்கடி போலீசார் வந்து எனக்குரிய ரயில் எப்போது வரும் என்று கேட்பார்கள். எனவே, ஒரு ஸ்டேஷனில் ஒரு நாளுக்கு மேல் எங்களால் செலவிட முடியாது. எனது நண்பர்கள் சிலர் எனக்கு ரூ 200 அல்லது ரூ 300 அனுப்புவார்கள், அதைப் பயன்படுத்தி நாங்கள் எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம். என் கணவர் வீட்டில் கோழிக்கடை வைத்திருந்தாலும், அவரால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
என் வீட்டாரும், உள்ளூர் மக்களும் என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் மீது குற்றம் கண்டுபிடிப்பதில் அர்த்தமில்லை. படம் அப்படி… அதன் திரையிடலை உடனடியாக நிறுத்த வேண்டும். முதல்வரிடம் புகார் அளிக்க வேண்டும். அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், எனக்கு ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருக்கும்: அவர்களின் இடத்தில் என் வாழ்க்கையை முடிக்க வேண்டும். முதல்வரிடம் செல்வதற்கு முன் திரைப்பட காட்சியை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக எனது வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார். அதுவும் விரைவில் செய்யப்படும்” என்று அந்தப் பெண் கூறினார்.